குடியாத்தம், மே 29- குடியாத்த ஒன்றியத்தில் உள்ள தட்டப் பாறை மலை சூழ்ந்த கிராமமாகும். இங்கு பல மாதங்களாகவே குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இதுகுறித்து அதிகாரி களுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வரு கின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பானை உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், பிள்ளையார் கோவில் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் தொட்டி (சின்டெக்ஸ்) அமைத்து வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதிக்குள் குடிதண்ணீர் வழங்க ஏற் பாடு செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை யடுத்து போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே. சாமிநாதன், குணசேகரன், சிலம்பர சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.