tamilnadu

img

4 தொகுதி இடைத்தேர்தல் எப்போது

சென்னை, ஏப்.4- மக்களவை தேர்தல் மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசா சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் தேர்தல் ஏற் பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்றும் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், காவல், வருமான வரி மற்றும் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தோம். பணப்பட்டுவாடா விவகாரத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியது என்றும் தெரிவித்தார். வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்களை இடையூறு செய்யக் கூடாது எனவும் வலியுறுத்தின. தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. காவல், துணை ராணுவம் ஆகியன பாதுகாப்புக்கு தயார் நிலையில் உள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.பூத் சிலிப் மூலம் வாக்களிக்க முடியாது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 2 நாளில் வழங்கப்படும். பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வாக்குச் சாவடிகள் மக்களவைத் தொகுதிக்கு தலா ஒன்று அமைக்கப்படும். சி.விஜில் செயலியை செல்போனில் டவுன்லோடு செய்து அதன் மூலமும் தேர்தல் விதி மீறல் குறித்து புகார் அளிக்கலாம். விடுபட்ட 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர் பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும். மேலும் ‘நமோ’ டிவி விவகாரம் குறித்து வெள்ளிக்கிழமை(ஏப்.5) விசாரணை செய்யப்படும் என்றும் கூறினார்.