சென்னை, ஜூலை 29 - ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு டாக்டர் சூர்யா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஞாயி றன்று (ஜூலை 28) வழங்கப்பட்டது. எல்ஐசி முதன்மை கோட்ட மேலாளர் கருப்பை யாவின் மூத்த மகள் டாக்டர் கே.சூர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மக் காய்ச்சலால் மரணமடைந்தார். அவரது இழப்பை தாங்க முடியாத அவரது குடும்பத்தினர் அவரது பெயரில் அறக்க ட்டளை ஒன்றை துவங்கி ஆண்டுதோறும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை முகப்பேரில் உள்ள கலைச்செல்வி கருணா லையா சமூகநல நிறுவன த்தில் கேக் வெட்டி, அங்கி ருந்த ஆதரவற்ற குழந்தை கள், முதியோர்களுக்கு உணவு, பெட்ஷீட், சோப்பு, எண்ணெய், பச்சிளம் குழந்தைகளுக்கு தேவை யான பொருட்களை வழங்கி னர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசிய முன்னாள் தமிழக காவல் துறைத் தலைவர் காளி முத்து, பச்சிளம் குழந்தை களும், ஆதரவற்ற குழந்தை களும், அனுபவமிக்க முதி யோர்களும் ஒரே வளாக த்தில் இருப்பது சிறப்பான அம்சம் என்றார். ஆதரவற்றவர்கள் என யாரும் இந்த உலகில் இல்லை. அன்பால் எதை யும் சாதிக்க முடியும். கல்வி தாயைப் போன்றது. அதை புரிந்து படித்தால், கல்வி நம்மை அரவணைத்து கடைசி வரை பாது காக்கும். அனைவரும் மனித நேயத்துடனும் நேர்மையுட னும் இருக்க வேண்டும் என்றார். இதில் எல்ஐசி முதன்மை கோட்ட மேலாளர் கருப்பையா, வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகசாமி, கண்ணன் பாபு, மகமாயி, கருணாலயா இணைச் செயலர் ரஜினிதேவி, தேவேந்திரன், ஆறுமுக நயி னார், கருணாகரன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.