tamilnadu

img

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்

சென்னை, ஜூலை 5 - சென்னையில் திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் ஊரடங்கில் தளர்வு  அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியில் செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய  வேண்டும். தனிமனித இடைவெளியை  பின்பற்ற வேண்டும் என்று தமி ழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் உள்ள  15 மண்டலங்களில் 13 மண்டலங்க ளில் கொரோனாவால் பாதித்தவர்க ளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. இந்நிலையில் வளசர வாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட போரூர் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்,  சென்னை மாநகராட்சி ஆணையர் பிர காஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களி டம் பேசிய ராதாகிருஷ்ணன், கொரோனா என்பது சளி, காய்ச்சல்  போன்றதொரு பாதிப்பு; எனவே  யாரையும் ஒதுக்கி வைத்க வேண்டாம். நோய் அறிகுறி இருந் தால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். சென்னையில் நோய் தொற்று பாதித்தவர்கள் எண் ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றன.

இந்த தொற்றுக்கான மருந்து  இல்லாத நேரத்தில், பொதுமக்கள் தான் கவனத்தோடு இருக்க வேண்டும். கொரோனாவை தடுக்க,  நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை யான உணவுகளை சாப்பிடுவது அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி இல்  லாததால்தான் கொரோனா வேக மாக பரவுகிறது. திங்களன்று (ஜூலை 6) முதல் கடைகளுக்கு செல்வோர், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட வற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றார். நோய் தொற்று அறிகுறி இருந்  தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அறிகுறி  வந்தால் அதனை மறைக்க வேண் டாம். 20 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளித்துள்ள நிலையில் இதுவரை 18 பேர் குணமடைந்துள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்  பட்டு வருகிறது.

மதுரை, திரு வண்ணாமலை உள்ளிட்ட மாவட் டங்களிலும் பரிசோதனையை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் இறப்பு விகிதம்  குறைந்த அளவில்தான் உள்ளது.  கொரோனா தொற்றால் இறந்தவர் கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், சர்க்கரை நோய்  உள்ளிட்டவற்றால் இறந்தவர் கள்தான் அதிகமாக உள்ளனர். இந்த  காலகட்டத்தில் பிற நோயால் இறந்தால் கூட, கொரோனா பரி சோதனை செய்து எவ்வாறு இறந்தார் என்று தகவல் வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் கொரோனா வுக்கு 12 வகையான சிகிச்சை அளிக்  கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

வார்டுக்கு ஒரு வாகனம்
இதனைத் தொடர்ந்து பேசிய  மாநகராட்சி ஆணையர் பிர காஷ், கொரோனா தொற்றால் உயி ரிழந்தோரை தன்னார்வலர்களுடன் இணைந்து மாநகராட்சி அடக்கம் செய்து வருகிறது. சென்னையில் தேவையான அளவு சிகிச்சை மையங்  களும், படுக்கைகளும் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் வழி காட்டுதலில், இறந்தவர்களின் உட லில் இருந்தும் நோய் தொற்று பரவ  வாய்ப்பு உள்ளது என கூறப் பட்டுள்ளது. அதனால்தான் இறந்த வர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், நேரடியாக அடக் கம் செய்கிறோம் என்றார். ஒரு வீட்டை தனிமைப்படுத்தும் போது, அவர்களுக்கு தேவை யான பொருட்களை வாங்கி வர  தன்னார்வலர்கள் மூலம் ஏற்பாடு  செய்கிறோம். எனவே, தனிமைப்ப டுத்தலை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. தொற்று பரவக்கூடாது என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று விளக்கமளித்தார். சென்னையில் 12 பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் மக்களை பரிசோதனை செய்து முடித்து, மீண்டும் அவர்களை வீட்டிற்கு கொண்டு செல்ல 4 மணி  நேரம் ஆகிறது. இதனை 3 மணி நேர மாக குறைக்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். எனவே 15 பேரை அழைத்து செல்லும் வகையில் வார்டுக்கு ஒரு வாகனம் வழங்கப் பட்டுள்ளது. அந்த வாகனத்தின் மூலம் மக்களை பரிசோதனை மையத்திற்கு அழைத்து சென்று வர  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.