சென்னை, ஏப். 13-இந்திய மருத்துவக் கவுன்சிலை சீரழிக்கும் பாஜகவை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கம் பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், மருத்துவர்கள் எஸ்.காசி, பி.சந்திரா, ஆர்.பி.சண்முகம், கே.முத்துக்குமார், பொருளாளர் பா.கருணாநிதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை. நூற் றாண்டு பழமை வாய்ந்த நோய் தடுப்பு மருந்து உற் பத்தி நிறுவனங்கள் மூடப் பட்ட போது அதை எதிர்த்து போராடி அவற்றை மீண்டும் திறக்க வைத்தோம். தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது சமூக நீதி அடிப்படையில் ஊக்க மதிப்பெண் வழங் கப்பட்டு வந்ததால், ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி அரசு பொது மருத்துவமனை வரை எல்லா அரசு மருத்துவமனைகளிலும் தகுதி பெற்ற மருத்துவர்கள் இருப்பதை உத்திரவாதப்படுத்தியது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ அறிமுகம் செய்து ஊக்க மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 5 வருட மருத்துவ பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் உரிமைச் சான்றுக் கான தேசிய அளவிலான தேர்வு அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட மருத்துவர்களை கொண்ட அமைப்பு இந்திய மருத்துவ கவுன்சில்.
இதன் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவும், அந்த அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக் கையுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு அதை கலைத்துவிட்டு அரசு நிர்வாகிகள் நிறைந்த அமைப்பாக அதை மாற்ற முயற்சி மேற்கொண் டது. ஆனால், நாடு தழுவிய போராட்டத்தின் மூலம் அது தற்காலிகமாக தடுத்து நிறுத் தப்பட்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு தேசிய மருத் துவ ஆணையத்தை கொண்டு வரும் அபாயம் உள்ளது. பாஜக அரசு கடந்த 5 வருடத்தில் பொதுசுகாதாரத் துறையை வலுவிழக்கச் செய்துள்ளது. பாஜக தேர் தல் அறிக்கை மிகத் தெளிவாக மருத்துவத்தையும், மருத்துவக் கல்வியையும் தனியாருக்கு தாரை வார்க்க வழிவகுக்கிறது.காங்கிரஸ் தனது தேர் தல் அறிக்கையில் சுகாதார உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும், சுகாதாரம், கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக் கும் கட்சிகளுக்கிடையே ஒருமித்த கருத்துள்ளது. ஆனால், பாஜக தேர்தல் அறிக்கையில் சுகாதாரம் குறித்தோ, மருத்துவ கல் லூரிகளை மேம்படுத்துவது குறித்தோ குறிப்பிடப் படவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என போராடி வரும் சூழலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தொடரும் என தெரிவித்துள்ளார்.சுகாதாரத் துறையை, அரசு மருத்துவக் கல்லூரிகளை பாதுகாக்க பொதுமக்கள் பாஜக, அதிமுக கூட்டணியை புறக்கணிக்க வேண் டும். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.