tamilnadu

அச்சுறுத்தல் இன்றி தொழில்செய்யும் சூழலை உருவாக்க வேண்டும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 4- வணிகர்கள் அச்சுறுத்த லின்றி தொழில் செய்ய உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு, தமிழ்  நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு மாநிலத்தலை வர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள் ளார்.   இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊர டங்கின் காரணமாக வணி கர்களும், தொழில் கூடங்க ளும், தயாரிப்பாளர்களும், வணிக நிறுவனங்கள் சார்ந்த கூலித் தொழிலாளர்களும் என 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 6ஆம் தேதி முதல் மீண்டும் தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என அரசு  அறிவித்துள்ளது. தொழில்  நிறுவனங்கள் திறக்கும் போது, அரசு அதிகாரிகளின் அச்சுறுத்தல்கள், விதி மீறல்கள், நீதிக்கு புறம் பான நடவடிக்கைகள், அவ தூறுகள், அபராதக் கட்ட ணங்கள், கடைகளுக்கு சீல் வைத்தல் போன்றவற்றை அடியோடு கைவிட வேண்  டும். வாழ்விழந்த வணி கர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட உரிய அறிவு றுத்தல்களை அரசு வழங்க வேண்டும். சாத்தான்குளம் தந்தை, மகன் இரட்டைக்கொலை வழக்கில் மதுரை நீதியரசரின் ஆணைகளும், தமிழக அரசு சிறப்பு புலனாய்வு பிரிவு எடுத்துவரும் நடவ டிக்கைகளும் மிகுந்த பாராட்டுக்குரியவை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தை ஆராய்ந்து, அவர்கள் பணியில் சேருவதற்குமுன் வைத்திருந்த சொத்து மதிப்  பையும், பணியில் சேர்ந்த பின் சேர்த்திருக்கிற சொத் துக்களின் மதிப்பையும் கணக்கிட வேண்டும். வரு வாய்க்கு அதிகமாக சொத்துக்கள் இருப்பின், அதை அரசு உடனடியாக பறி முதல் செய்ய வேண்டும். சாத்  தான்குளம் இரட்டை கொலை சம்பவம் போல், மீண்டும் தமிழகத்தில் நடந்து விடாமல் பாதுகாப்பு நட வடிக்கைகளை அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.