tamilnadu

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வார்டு வரைவு மறுவரையறை கருத்துகேட்புக் கூட்டம்

காஞ்சிபுரம்,பிப்.7- நகர்ப்புற மற்றும் ஊரக  உள்ளாட்சி அமைப்புக ளுக்கான  வார்டுகள் வரைவு  மறுவரையறை கருத்துக் கேட்புக் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிப். 15 அன்று நடைபெற வுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பொன் னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரி வித்திருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்டத் தைச் சார்ந்த 5 ஊராட்சி ஒன்றி யங்களில் அடங்கிய கிராம  ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டு கள், மாவட்ட ஊராட்சி வார்டு கள், 5 பேரூராட்சிகள் வார்டு கள் மற்றும் ஒரு நகராட்சி வார்டுகள் மறுவரையறை விவரங்கள்  பிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்டது. இதன் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துகள்  பிப்ரவரி 01 முதல் 08 வரை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இக்கருத்துகளின் மீது விவாதித்து முடிவு செய்ய பொதுமக்கள் மற்றும் அர சியல் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் மறுவரையறை அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் பிப்ரவரி 15  அன்று பிற்பகல் 3 மணிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட அலுவலக  மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் நடைபெறள்ளது. இவ்வரைவு மறுவரை யறையின்   மீது கருத்துகள்  தெரிவிக்க விரும்பும் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்க ளுடைய கருத்துக்களை நேரில் ஆஜராகி தெரிவிக்க லாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.