tamilnadu

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில் சோதனைச் சாவடிகள்

செங்கல்பட்டு, மார்ச் 25- கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊடரங்கு நிலை அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 இடங்களில்  சோதனைச் சாவடி அமைத்து காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான பொன்னி யம்மன்பட்டறை, அரக்கோணம் சாலையில் படுநெல்லி, மாகறல் மணல்மேடு, திருவண்ணாமலை மாவட்ட எல்லையான அப்துல்லாபுரம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செட்டிப்பேடு சந்திப்பு, வாலாஜாபாத்தை அடுத்த சங்கராபுரம் உள்ளிட்ட 26 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  காஞ்சிபுரத்தில் பேருந்து நிலைய சிக்னல் பகுதி, மூங்கில் மண்டபம், ரங்கசாமி குளம், கீரை மண்ட பம் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், இருசக்கர வாகனங்களில் வந்தவர்களி டம், ‘உங்களின் நன்மைக்காகவே இந்த ஊரடங்கு, மறுமுறை வரக்கூடாது’ என எச்சரித்து அனுப்பினர். மேலும் காஞ்சிபுரம் நகரத்தில் காவலர்கள் ரோந்து  வாகனத்தில் சென்று அத்தி யாவசிய வேலைகளைத்  தவிர்த்து வெளியில் சுற்ற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். இதனால் காஞ்சிபுரம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.  குறிப்பாக செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு எல்லையான திருமுக்கூடல், கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு, தாம்பரம் அருகே அரணியம்மன் கோயில் உள்ளிட்ட 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து,தேவை யற்று சாலையில் சுற்றும் வாகனங்களை எச்சரித்து அனுப்பும் பணியில் தற்போது காவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர். 

முக கவசம், சாணிடைசர்  தட்டுப்பாடு

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு உத்தர விட்டது. மத்திய சுகாதாரத்துறை எச்சரித்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவுதலை  தடுக்க உபயோ கப்படும் முகக் கவசங்கள், சாணிடைசர், கைகழுவும் திரவம் உள்ளிட்டவைகள் கடந்த 15 தினங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களின் சுகாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள வணிக மருந்தக நிறுவனங்களுக்கு முக கவசம் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டு ள்ளது.   இதனால், பொதுமக்கள் மருந்த கங்களில் முக கவசம் கேட்பதும் அதற்கு வணிகர்கள் ஸ்டாக் இல்லை என்பதே பதிலாக உள்ளது. மேலும் சானிடைசர் உள்ளிட்ட உபகரணங்களு க்கு கூட அதிக விலை வைத்து மருந்த கங்கள் விற்று வந்த நிலையில் அரசிடம் இருந்து அதன் விலை  அறிவிப்பு வெளியிட்ட உடனேயே மொத்த மருந்து வணிகர்கள் காஞ்சிபுரத்தி லுள்ள மருந்தகங்களில் உள்ள பொருட்களை  திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காஞ்சிபுரத்தில் முகக் கவசம் மற்றும் சானிடைசர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதேபொன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள மருந்து கடைகளிலும் சாணிடை சர், முக கவசம், கைகழுவும் திரவம் போன்றவைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ளது.  எனவே சாணிடைசர்,  முக கவசம், கைகழுவும் திரவம் போன்றவை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.