சென்னை:
வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த மாத இறுதிக்குள் செயல் முறை சோதனை நடத்தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட ஆட்சியர்களுக்கும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர் தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண் ணப்பங்களை பெறும் நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20 ஆம் தேதி வெளியிடப் படுகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக தேர்தல் ஆணையம் எடுத்துள் ளது.வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தமிழக சட்டப்பேரவை தேர் தல் முன் ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.தலைமைச் செயலகத்தில் உள்ள தேர்தல் துறை கூட்ட அரங்கில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் பேசினார். அப்போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்ய வேண்டிய தேர்தல் ஏற் பாடுகள் குறித்து ஆலோசனை செய்தார்.புகைப்படங்களுடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு எந்திரங்களும் இந்த மாத இறுதிக்குள் செயல்முறை சோதனை நடத் தப்பட்டு தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங் கப்பட்டது.
அரியலூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்முறை சோதனை அனைத்துக் கட்சியினர் முன்பு பரிசோதித்து காட்டப்பட்டுவிட்டது. இது பற்றிய அறிக் கையை உடனே அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர்.மீதம் உள்ள மாவட்டங்களில் இன்னும் ஒருவாரத்துக்குள் வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்முறை பரிசோதனை செய்யப்பட்டு தயாராக இருக்க வேண்டும். அனைத்து மாவட் டங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து அறிக்கை தயாரிக்க வேண்டும். கொரோனா வைரஸ் நடைமுறையை பின்பற்றவும் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.வருகிற 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் படுவதையடுத்து, 25 ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண் டாடப்படுகிறது. தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் சென்னையில் நடைபெறும் விழாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த விழாவில் பங்கேற்கும் ஆளுநருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேரில் சென்று அழைப்பு விடுத்தார். அப்போது விழாவில் பங்கேற்க கவர்னர் ஒப்புதல் அளித்தார்.