விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விராட்டிக் குப்பம் கிராம ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் 30 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் சமீபத்தில் பெய்த மழையில் இடிந்து விழுந்து விட்டன. எனவே அரசு உடனடியாக வீடு கட்டித் தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அந்தப் பகுதி மக்கள் மனு அளித்தனர்.