சென்னை, ஜூன் 6- வேடந்தாங்கலின் பரப்பு அளவைக் குறைக்க முனையும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மதிமக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். வேடந்தாங்கல் பறவைகள் புகலிடம் 30 ஹெக்டேர் பரப்பில் அமைந்து இருக்கின்றது. சைபீரியக் கடுங்குளிரில் வாழு கின்ற பறவைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்தும், சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து இங்கு வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்கின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற வேடந்தாங்க லில், சுமார் 40 விழுக்காடு பரப்பில், தொழில் துறை சார்ந்த உரிமங்களை வழங்க, தமி ழக அரசு முனைகின்ற செய்தி வேதனையை ஏற்படுத்துகின்றன. சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப் பகுதியை, 3 கிலோ மீட்டர் அளவிற்குச் சுருக்குவதற்கு ஒப்புதல் கோரி, தேசிய காடுகள் உயிர் இயல் வாரியத்திடம், தமி ழக அரசு கோரிக்கை விடுத்து இருக்கின்றது.
இதற்கு ஏதுவாக தலைமை வனப் பாதுகாவ லரைக் கட்டாயப்படுத்தி அறிக்கையும் பெற் றுள்ளனர். அதை, சுற்றுச்சூழல் துறைச் செய லாளரும் பரிந்துரைத்து இருக்கின்றார். இதன் பின்னணியில், அந்தப் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்தின் தொழிற்சாலை விரிவாக்கப் பணிகளுக்காகவே இந்த நட வடிக்கையில் அரசு ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகின்றது. வேடந்தாங்கலைக் குறி வைப்பது, இயற்கைப் பேரழிவுக்குத்தான் வழிவகுக்கும். சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப் பெருக்கமும் பாதிக்கப்பட்டால், மனித இனம் வாழவே முடியாது. எனவே, வேடந்தாங்க லின் பரப்பு அளவைக் குறைக்க முனையும் முயற்சியைத் அரசு கைவிட வேண்டும். மத்திய அரசு மாநில அரசின் திட்டத்திற்கு அதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.