சென்னை, ஜூன் 13 - இந்தியாவை வழிநடத்துவது அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, சனதானம் அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதனத்தை ஆதரித்து பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம் வருமாறு: ஒருவர் அரசியலமைப்புச் சட்ட நெறி களை மீறி, சனாதனம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று ஆளுநர் பேசியுள்ளார். மனிதசமத்துவத்தை மறுக்கும் வருணாசிரமத்தை நிலை நாட்டத் துடிக்கும் ஆர்எஸ்எஸ், சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப் பிடித்து பெருமை பொங்க பேசி உள்ளார். இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால் வருண பேதத்தை வலியுறுத்தும் சனாத னம் அல்ல. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாடு. இந்த மாநிலத்தில் ஆளுநராக இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக் கும் சனாதனத்திற்கு ஆதரவாக பேசி இருப்பதன் மூலம், ஆளுநர் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்து விட்டார். எனவே, உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.