tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதம் திணிப்பு.. வைகோ கண்டனம்....

சென்னை:
"கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை ஒழித்துவிட்டு சமஸ்கிருதத்தை திணிப்பதா?" என ஒன்றியஅரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய மக் கள்தொகைக் கணக்கின்படி, வெறும் 24,000 பேர் மட்டுமே பேசுகின்ற சமஸ் கிருத மொழியை, 135 கோடி மக்களின் நாக்குகளில் திணிக்க முயற்சிக்கின் றார்கள்.அதற்காக, பல மொழிகள் பேசும் இந்திய மக்களின் வரிப்பணத்தைப் பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து வருகின்றார்கள். தமிழ் செம் மொழி என அறிவித்து விட்டு, வெறும் 22 கோடி ரூபாய்தான் வழங்கி இருக் கின்றார்கள். அதே நிலைமைதான், மராட்டியம், பெங்காலி உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும். ஒன்றிய அரசின் கல்வித்துறை, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை, இந்தியா முழுமையும் நடத்தி வருகின்றது. அங்கே, 1 முதல் 6 வரையில், மாநில மொழிகளைப் படிக்கலாம். ஆனால், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில், விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், அந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாகத் தமிழ் இருந்தது. தமிழகத்தில் பயின்ற மாணவர்கள், தமிழைத்தான் விருப் பப் பாடமாகத் தேர்வு செய்து படித்து வந்தனர்.

ஆனால், இப்போது தமிழ் மொழியை நீக்கி விட்டார்கள். இந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என ஆக்கி இருக்கின்றார்கள். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், இந்த நடைமுறையை ஓசை இல்லாமல் புகுத்தி விட்டார்கள்.தமிழை ஒழித்துக்கட்ட, நரேந்திர மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற் சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே, இந்தப் பிரச்சனையில், தமிழ்நாடு அரசு உடனே கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மொழி கற்பிக்காத பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று அவர் தெரிவித் துள்ளார்.