tamilnadu

img

தடுப்பூசி:மாற்றுத் திறனாளிகளுக்கு தனிப் பிரிவு....

சென்னை:
மாற்றுத்திறனாளி களுக்கு தடுப்பூசி செலுத்து வதற்காக, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படை யில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு அமைக்கப்பட வேண்டும் என்று  தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு மே 16 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல், தடுப்பூசி பெறு வதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திற னாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.  அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாதுமாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப் பட வேண்டும்.தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள்அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்.