tamilnadu

img

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹிட்லரைப் போல் காணாமல் போவார்! புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் சாடல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  ஹிட்லரைப் போல் காணாமல் போவார்! புதுச்சேரி ஆர்ப்பாட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் சாடல்

புதுச்சேரி, ஜன. 22- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆணவப் போக்கைக் கண்டித்தும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடு தலை செய்யக் கோரியும் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அண்ணா சிலை எதிரே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: "உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கும் ஒற்றை நோக்கத்தோடு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டு வருகிறார். சர்வாதிகாரி ஹிட்லரைப் போலவே டிரம்ப்பும் விரை வில் காணாமல் போவார். உலக நாடு களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்த இந்தியா, இன்றைக்கு வெனிசுலா அதிபர் கைது குறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது கண்டனத்திற்குரியது." இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் முருகன், மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் வெ. பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராஜாங்கம், கொளஞ்சியப்பன், சீனுவாசன், கலிய மூர்த்தி, கமிட்டி செயலாளர்கள் ஜோதி பாசு, ராம்ஜி, சரவணன், அன்புமணி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளான கட்சித்தொண்டர்கள்  பங்கேற்றனர்.