சென்னை:
தமிழகத்தில் 5 நகர்ப்புற பகுதிகளில் வனத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
மாநில வனத்துறைகளின் மாநாடு நடைபெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பிற மாநில வனத்துறை மந் திரிகள், இதில் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நகர்ப்புற வனத்திட் டம் பற்றி பேசுகையில்," நாடு முழுவதும் 5 ஆண்டு காலத் தில் 200 இடங்களில் மாநகராட்சி அல்லது நகராட்சி பகுதிகளில் நகர்ப்புற வனத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள் ளது. இதை செயல்படுத்த சென்னை, வேலூர், சேலம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 நகர்ப்புற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது" என்றார்.இந்த திட்டத்திற்காக ஒவ் வொரு நகரப் பகுதிகளிலும் குறைந்தபட்சம் 10 ஹெக்டேர் பரப்பளவு மற்றும் வன நிலத்தில் அதிகபட்சம் 50 ஹெக்டேர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் வேலி அமைத்தல், நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு மற்றும் தோட்டம் அமைப்பதற்கான உத்தேச மதிப்பீடு தயாரிக் கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்த மாநாட்டில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.