tamilnadu

img

தூத்துக்குடியில் இன்று வணிகர் சங்க பேரவை மாநாடு

சென்னை:

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநாட்டில் தமிழகம் முழுவதுலிருந்து 5 லட்சம் வணிகர்கள் பங் கேற்கிறார்கள் என மாநிலத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.


தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் மே 5 வணிகர் தின விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 36-வது வணிகர்தின விழா, ‘சுதேசி பொருளாதார’ பிரகடன மாநாடு தூத்துக் குடியில் மே 5 ஆம் தேதி நடக்கிறது. இதற்காகத் தூத்துக்குடி ‘நிலா ஸீ புட்ஸ்’ வளாகத்தில் பிரமாண்ட மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.இதை யொட்டி 4 ஆம் தேதி சுதேசி கண்காட்சியை மாநாட்டுத் தலைவர் த.வெள்ளையன் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.


கடைகள் அடைப்பு

இம் மாநாடு குறித்து மாநிலத் தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-வணிகர் சங்க பேரவை சார்பில் தூத்துக்குடியில் 36-வது வணிகர் மாநாட்டில் தமிழகம் முழுவதுமிருந்து 5 லட்சம் வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டையொட்டி மே 5 ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அகில இந்திய வர்த்தக சங்கத் தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, சுனில் பாண்டே, பழ. நெடுமாறன், ஆர்.நல்லகண்ணு, மதிவாணன், மாதவராஜ், ரமேஷ் குமார், சுப.உதயகுமார், தெய்வசிகாமணி, இரா.லெனின், ஹென்சி தீபென், எம்.கே.ராமன், ஜி.சங்கரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்கள்.மாநாட்டிற்கு பொதுச் செயலாளர் கே.தேவராஜ், பொருளாளர் எஸ். ஆர்.வி.ரத்னம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.