சென்னை,ஜனவரி.25- தமிழ்நாடு முழுவதும் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
1938 முதல் 1965ஆம் ஆண்டுவரை ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்தி திணிப்புக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.