tamilnadu

img

திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட கிராமம்

திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயன் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.திருப்பூர் வடக்கு ஒன்றியப் பகுதிகளான பெருமாநல்லூர், எஸ்.எஸ்.நகர், காட்டுப்புதூர், ஈட்டிவீரம்பாளையம், ராக்கியாபட்டி, லட்சுமி கார்டன், வாரணாசி பாளையம், ஆண்டிபாளையம், மேட்டுப்பாளையம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டார். பாஜகயும் அதிமுகவும் ஏழைகளுக்கு எதிராக செயல்படுகின்றன. சமையல் எரிவாயு விலையைக் கடுமையாக உயர்த்தி இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மூலம் சிறு குறு நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் கே.சுப்பராயன் பேசினார்.