சென்னை:
கந்தசஷ்டி கவச விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் நிர்வாகி செந்தில் வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பி கறுப்பர் கூட்டம் என்ற ‘யூடியூப்’ சேனலில் வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன், ராமாபுரத்தைச் சேர்ந்த சுரேந்திரன் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் கிரைம்’போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்களில் செந்தில்வாசனிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.இதேபோல கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதம் பற்றி சமூகவலைதளங் களில் அவதூறு பரப்பியதாக சென்னை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த மவுண்ட் கோபால் என்பவரையும், ‘சைபர் கிரைம்’போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்தநிலையில் கறுப்பர் கூட்டம் சுரேந்திரன், மவுண்ட் கோபால் ஆகிய இருவரையும்அதன் பேரில்
அவர்கள் இருவரும் சிறையில் அடைக் கப்பட்டனர்.