tamilnadu

தூத்துக்குடி மாணவர்கள் வழக்கு வாபஸ் பெறப்படும்: முதல்வர் உறுதி....

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிளித்து பேசினார்.  

அவர் தனது உரையை நிறைவு செய்த பிறகு, பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றகுழுத் தலைவர் வி.பி. நாகை மாலி,“ஆளுநர் உரை மீதான உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சுருக்கமாகவும், தெளிவாகவும் பதில் அளித்த முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சியின்போது, மக்களுக்காக போராடிய தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகளை புனைந்தார்கள். அந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்திருப்பதும் மகிழ்ச்சிக்குரியது என்றும் குறிப்பிட்ட நாகைமாலி, தூத்துக் குடி தாமிர உருக்காலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது கடந்த ஆட்சியாளர்களால் போடப்பட்ட ஏராளமான வழக்குகள் தள்ளுபடி செய்திருப்பதுடன், பாதிக் கப்பட்டவர்களுக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப் பட்டுள்ளதற்கும் காயப்பட்டவர் களுக்கு நிதியுதவியும் செய்துள்ளதற்கும் இடதுசாரிகள் சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும்  நன்றி தெரிவித்தார்.

அதே நேரத்தில், தூத்துக் குடி போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மீதும் அதிமுக அரசு, போட்டுள்ள வழக்குகள் நிலுவையில் இருப்பதையும், அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டி, அந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் முதல்வருக்கு கொடுத்துள்ள கடிதம் குறித்தும் விளக்கம் அளித்ததுடன் மாணவர்கள் மீதான வழக்குகளையும் தள்ளுபடி செய்து மாண
வர்களின் எதிர்காலத்திற்கு ஒளிப் பாய்ச்சுமாறும் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர் பதில்
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர்,“தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி பல வழக்குகளில் சிக்கியுள்ளவர்களுக்கு கிடைத்துள்ள விடுதலை ஒரு பகுதியினருக்கு கிடைக்கவில்லை என்று சிபிஎம் உறுப்பினர்  சுட்டிக்காட்டியுள்ளார். மாணவர்களை விடுதலை செய்யக்கோரும் சிபிஎம் மாநிலச் செயலாளரின் கடிதம் தன்னிடம் கொடுக்கப்பட்டுள்ளதையும், அந்த வழக்குகள் அனைத்தும் சட்டத்துறையின் ஆய்வில் இருப்பதால் இந்த ஆய்வுப் பணிகள் முடிந்தும் நிச்சயம் உரிய தீர்வு கிடைக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.கடந்த கால ஆட்சியில் போடப் பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ஆய்வு செய்து வருகிறோம். இதில், நியாயமற்ற முறையில், வன்முறைக்கு சிறிதும் இடம் கொடுக்காமல் இருந்தால் அத்தகைய வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து வருகிறோம்.அதுபோன்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் முத
லமைச்சர் தெரிவித்தார்.