tamilnadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு முடிப்பு

உயிரிழந்தோரின் குடும்பத் திற்கு இழப்பீடு, விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு எனதமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகக் கூறி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதித்த ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிராக கடந்த ஆண்டு மே 22அன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைகொன்றனர். தொடர்ந்து, மறுநாள் ஒருவரும், காயமடைந்தவர் களில் ஒருவரும் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து வந்தது. இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத் திற்கு இழப்பீடு, விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைப்பு எனதமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.