tamilnadu

img

பீர்குப்பத்தில் இருளர் மக்களுக்கு வீடு கட்டும் பணியை துவக்கி வைத்தார் திருத்தணி எம்எல்ஏ!

பீர்குப்பத்தில் இருளர் மக்களுக்கு வீடு கட்டும்  பணியை துவக்கி வைத்தார் திருத்தணி எம்எல்ஏ!  

திருவள்ளூர், ஜூலை 15- பீர்குப்பம் இருளர் இன மக்களுக்கான கான்கிரீட் வீடுகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள பீரகுப்பம் இருளர் இன மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை தேவைகள் இன்றி நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் திருத்தணி திமுக சட்டமன்ற உறுப்பி னர் எஸ்.சந்திரன் ஜூலை 9  அன்று நடத்திய ஆய்வின்  அடிப்படையில் சில கோரிக் கைகளை நிறைவேற்றினார். இந்த நிலையில் பீரகுப் பம் ஊராட்சியில் வாழும்  15 இருளர் இன மக்களுக்கு  தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தின் விளைவாக குடிமனை பட்டா பெற்றுக் கொடுக்கப்பட்டது. குடிசை யில் வாழும் அம்மக்களுக்கு பிரதம மந்திரி ஜன் ஜன்மன்  ஆதிவாசி நியாய மகா அபியான் திட்டத்தில் வீடு கள் கேட்டு திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவல கத்தில் பல முறை மனு கொடுத்தும் வீடுகள் வழங் கப்படவில்லை. அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள். இந்த சூழலில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் முன்முயற்சியால், அம்மக்களுக்குஎய்ட் இண்டியா தொண்டு நிறுவனத்தின் சார்பில் 15 குடிசைக்கள் அமைத்து கொடுத்து, சோலார் லைட்டுகளும் வழங்கினர். மழைக்காலங்களில் குடிகைகள்  பாதுகாப்பாக இருக்காது என்பதால், சென்னைரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் 15  இருளர் இன குடும்பங்க ளுக்கு கான்கிரீட்  வீடுகள்  கட்டி கொடுக்க முன்வந்துள் ளனர். இதனை தொடர்ந்து திங்களன்று (ஜூலை 14),பீரகுப்பத்தில்வீடுகள் கட்ட சந்திரன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து சென்னை ரோட்டரி சங்கத்தின் சார்பில் திரு வள்ளூர் அருகில் உள்ள  பேரத்தூர் கிராமத்தில் உள்ள 18 தலித் குடும் பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலை வர் நிக்கல் ராஜ், எய்ட் இண்டியா தொண்டு நிறுவ னத்தின்செயலாளர் பாலாஜி சம்பத், இணை செயலாளர் தாமோதரன்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்ன துரை, மாவட்ட செயலாளர்  ஆர்.தமிழ்அரசு, மாவட்ட குழு உறுப்பினர் வி.அந்தோணி, வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலை யரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.