தமிழக தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
சென்னை:
மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செப்டம்பர் 3 அன்றஆலோசனை நடத்த உள்ளார்.தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் வியாழன் மாலை 3 மணிக்கு ஆலோ
சனை கூட்டம் நடைபெறுகிறது.வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள் வது குறித்தும் இரட்டை பதிவுகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை:
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மணல் கடத்தினால் சிறைதான்: உயர்நீதிமன்றம்
சென்னை:
கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப் படுவதை தடுக்க மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால், மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகத் தெரிவித்தார்.இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத் தில் தமிழ்நாட்டில் கனிம வளமே இல்லாமல் போய் விடும் எனவும், குடி தண்ணீருக்கு வருங்கால தலைமுறைகள் திண்டாட வேண்டியது வரும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.முன்ஜாமீன் நிபந்தனையாக 25 ஆயிரம் ரூபாய் விதித்தாலும், அதை செலுத்த இந்த கும்பல் தயங்குவதில்லை எனவும், முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த நீதிபதி, இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது எனவும், சில காலம் சிறையில் இருந்தால்தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும் எனவும், கடத்தல் குறைந்து இயற்கை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.பின்னர், மணல் கடத்தல் வழக்கில் சிக்கி முன்ஜாமீன் கோரிய மனுக்களை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:
சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப் பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன்? என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மேலும் சித்த மருத்துவ இணை இயக்குநர் பதவியை கலைத்தது ஏன்? என்றும், இதுதொடர்பாக அடுத்த வாரம் விளக்கமளிக்கவேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 118 செயலிகளுக்கு தடை
புதுதில்லி:
இந்தியாவில் மேலும் 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துஉத்தரவிட்டுள்ளது.இந்தியாவில் 18 கோடி பேர் பதிவிறக்கம்செய்து விளையாடி வந்த பப்ஜி மொபைல்கேம் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
காலண்டர், டைரி இல்லை: மத்திய அரசு
புதுதில்லி:
அரசுத் துறைகள் சார்பாக காலண்டர், டைரிஉள்ளிட்டவை அச்சிட்டு கைப்பிரதியாக வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இனி டைரி, காலண்டர் உள்ளிட்டவை டிஜிட்டல்ஆன்லைன் முறையில் கணினி, செல்போனில் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காகிதப் பயன்பாடு, அச்சிடும் செலவைக் குறைக்கவும், சூழலியல் பாதுகாப்புடன் மத்திய அரசு இந்தசிக்கன நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.