ஜவ்வாது மலையில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம்
திருவண்ணாமலை, ஜூலை 16- திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனா மரத்தூர் பகுதியில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப. செல்வன்,மாவட்டசெயற்குழு உறுப்பினர் எ.லட்சுமணன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன், மலை சங்க நிர்வாகி மணிமாறன், தவிச நிர்வாகிகள் டி.கே வெங்கடேசன், அருண்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி சிவாஜி, வாலிபர் சங்க நிர்வாகி முருகன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ச. குமரன், வட்டார செயலாளர்கள் இரா.இரவிதாசன், பி. சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.