வெனிசுலா ஜனாதிபதியைக் கடத்தி டிரம்ப் நிர்வாகம் அடாவடித்தனம் அமெரிக்காவைக் கண்டித்து சென்னை தூதரகம் முன்பு சிபிஎம் மறியல்; காவல்துறை தாக்குதல் - கைது!
சென்னை, ஜன. 5 - வெனிசுலா ஜனாதிபதி மதுரோவைக் கடத்திய அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டித் தும், மதுரோவை விடுதலை செய்யக்கோரியும் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தாக்கி அராஜகமாக கைது செய்தனர். இறையாண்மை மிக்க வெனிசுலா நாட்டிற்குள் புகுந்து ஜனாதிபதி நிக்கோலஸ் மது ரோவையும் அவரது மனைவி சிலியா புளோ ரசையும் அமெரிக்க படைகள் கடத்தி சென்று நியூயார்க் நகரில் உள்ள சிறையில் அடைத்துள் ளன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்த அராஜகத்திற்கு எதிராகவும், மதுரோவை உடனே விடுதலை செய்யக்கோரியும் உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். சுதந்திர நாடுகள் மீது ஆக்கிரமிப்பு - அடாவடியா? அதில், “வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத் திருக்கிற தாக்குதல் ஒரு சட்ட விரோத, அடா வடித் தாக்குதல் மட்டுமல்ல, அந்த நாட்டின் இறையாண்மையைக் காலில் போட்டு மிதிக்கும் கண்டனத்திற்கு உரிய நடவடிக்கை ஆகும். லத்தீன் அமெரிக்க நாடுகளை மிரட்டி தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் உரு வாக்கப்பட்ட ‘மன்றோ தத்துவத்தின்’ கீழ் தொட ரப்படும் சர்வதேச சட்டங்களை மீறிய நடவடிக்கையாகும். சுதந்திரமான ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஏகாதிபத்தியம் சொல்லும் பொய்களைப் போலவே, வெனிசுலா மீது, போதைப் பொருள் மையம் என்ற போலியான குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது. எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடவே தாக்குதல்! மேலும், “வெனிசுலா உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் வளம் கொண்ட நாடு என்ற பின்னணியில் இந்த ஆக்கிரமிப்பு, அமெரிக்காவின் கார்ப்பரேட் எண்ணெய் கம்பெ னிகளின் கொள்ளையை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படுகிற அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையாகும். வெனிசுலா சோசலிச கியூபாவின் வலுவான ஆதரவாளர் என்பதும் தாக்குதலுக்கான காரணத்தில் அடங்கும்” என்று கூறப்பட்டிருந்தது. எனவே, “அமெரிக்காவின் இந்த தாக்குத லுக்கு எதிராக, தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழுக்கள் உடனடி யாக, சாத்தியமான மையங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் டிரம்ப் உருவ பொம்மை யை எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும்” என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. ஆபாச வார்த்தைகளால் திட்டியும் - தாக்கியும் கைது! அதன்படி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் அமெரிக்கத் தூதரகம் முன்பு திங்கட் கிழமை (ஜன.5) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப் பட்டு, அதன்படி, தூதரகம் அருகே சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் ஆர். வேல்முருகன் (தென்சென்னை), ஜி. செல்வா (மத்திய சென்னை) உள்ளிட்டோர் கூடிய நிலையில், அவர்களைக் காவல்துறையினர் தாக்கி கைது செய்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த இடத்திற்கு வந்தவர்களையும் காவல்துறையினர் மடக்கி மடக்கி கைது செய்தனர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் கட்சி ஊழியர்களை கீழே தள்ளி, மிதித்து, ஆபாச வார்த்தைகளால் திட்டி வளைத்து வளைத்து கைது செய்தனர். ஒருசிலரை, காவ லர்கள் கும்பலாக தூக்கிச்சென்று வேன் மீது வைத்து நெறித்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. தர தரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர்! இதனைக் கண்டித்து, கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி. ராம கிருஷ்ணன் தலைமையில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், வே.ராஜசேகரன் உள்ளிட் டோர் ஊர்வலமாக வந்து அண்ணா சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங் களால் அண்ணாசாலையில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து தலைவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாநகராட்சி சிபிஎம் கட்சித் தலைவர் ஆர். ஜெயராமனை சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்று கைது செய்தனர். பலமணி நேரம் அலைக்கழிப்பு! அத்துடன் போராட்டத்தில் கைது செய்தவர்களை தங்க வைக்க இடமில்லாமல், பேருந்திலேயே வைத்து பல மணி நேரம் காவல்துறையினர் சுற்றிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு ராயப்பேட்டையில் உள்ள மண்டபத்திற்கு அனைவரையும் கொண்டு சென்றனர்.
