திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கல்லாபாடி அருந்ததிய இன குடும்பத்தினருக்கு 100 நாள் வேலை வழங்கக்கோரி திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் விதொச மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், வட்ட நிர்வாகிகள் ஜெயராணி, மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.