tamilnadu

img

சாலைப்பணியாளர்கள் குடும்பத்தோடு கைது

சென்னை, மே 28-சென்னையில் போராட் டம் நடத்த வந்த குடும்பம், குடும்பமாக வந்த சாலைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக செவ்வாயன்று (மே 28) ஆளுநர் மாளிகை அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் உள்ளிருப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.இதன்படி, குடும்பத்தினருடன் வந்த அணி அணியாக வந்த சாலைப்பணியாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பேருந்து போன்ற வாகனங்களில்  வந்தவர் களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இரண்டு இடங்களில் வைக் கப்பட்டிருந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங் கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் கூறியதாவது:பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் போன்ற கோட்டங்களில் சாலை பராமரிப்பு பணிகள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் கம்பெனிகள் 1800 கோடி ரூபாய் லாபமடைந்துள்ளன. எனவே, சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்காமல் நெடுஞ்சாலைத் துறையே செய்ய வேண்டும்,பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும், வேலை நிதியில் ஊதியம் வழங்காமல், அரசு பொது நிதியில் இருந்து தர வேண் டும், 13 வருடமாக காத்திருப் போருக்கு வாரிசு பணி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதலமைச்சர் வீடு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  நெடுஞ் சாலைத்துறை முதன்மை இயக்குநர் ஒப்புக் கொண்ட கோரிக்கைகள் மீது அரசாணை வெளியிடாமல் உள்ளனர். எனவே இந்தப் போராட்டம் அடுத்தடுத்து நடைபெறுகிறது. போராட் டம் தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன், பொருளாளர் இரா. தமிழ் உள்ளிட்டோர் போராட் டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.