tamilnadu

பழமண்டியில் ரேக்குகள் சரிந்து ரூ. 10 கோடிக்கு பழங்கள் சேதம்

அம்பத்தூர், ஏப். 30-சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவருக்கு சொந்தமான பழமண்டி, ஆவடியை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ளது. அசாம் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கிறார்கள். இந்த குடோனுக்கு கண்டெய்னர் லாரி மூலம் பழங்கள் வந்தன. அவற்றை ஊழியர்கள் ரேக்குகளில் அடுக்கிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரேக்குகள் சரிந்தன. இதில் ஆரிப் (23), ஜாரூல் (24), செய்யதுஹக் (22), ஹையத்துல்ஹக் (21) ஆகிய 4 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.தகவல் அறிந்து சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ரேக்குகளை அப்புறப்படுத்தி அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். நீண்ட போரட்டத் திற்கு பிறகு செவ்வாய்க்கிழமை காலை ஹையத்துல்ஹக்கை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மீட்புப் பணியின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பழங்கள் சேதமாகியிருக்கும் என்று கூறப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.