சென்னை, மார்ச் 24- சென்னை நகரில் செவ்வாயன்று (மார்ச் 24) சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டனர். உலக நாடுகளையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நோயை குணப்ப டுத்த ஹைட்ராக்சி குளோரோக்வின் என்ற மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொரு நாடும் பல்வேறு வகையில் இந்த நோயில் இருந்து தப்புவதற்கு பல்வேறு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமி ழக அரசும் 144 தடை உத்தரவு பிறப் பித்தது. அரசு பேருந்துகள் செவ்வாய்க் கிழமை மாலை 6 மணி முதல் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி காலை 6 மணி வரை இயக்கப்படாது என அரசு போக்கு வரத்து கழகம் தெரிவித்தது. ஆனால் அறிவிப்பிற்கு மாறாக செவ்வாய்க்கிழமை காலையிலேயே பேருந்துகளின் எண்ணிக்கையை திடீ ரென போக்குவரத்துக் கழகம் குறைத்து விட்டது. இதன் காரணமாக அத்தியாவ சிய தேவை உள்ளவர்கள் மட்டும் நடமாட லாம் என்று 144 தடை உத்தரவில் தெரி விக்கப்பட்டவர்கள் தங்கள் அலுவல கங்களுக்கு செல்ல வழக்கம் போல் புறப்பட்டனர். ஆனால் வழக்கமாக இயங்கக் கூடிய பேருந்துகளில் 10 விழுக்காடு பேருந்துகளே இயக்கப் பட்டன. அதாவது 10 பேருந்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர். ஒவ்வொரு பேருந்திற்கும் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகளில் நெரிசல் அதிகம் காணப் பட்டது. நிற்பதற்கு கூட இடமில்லாமல் தவித்தனர். இதுகுறித்து பேருந்துகளில் சிக்கி தவித்தவர்கள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் பேருந்துகள் ஓடாது என்று அறிவித்தி ருந்தது. அதை நம்பித்தான் நாங்கள் வந்தோம். ஆனால் கால் வலிக்க பல மணி நேரம் காத்திருந்ததோடு மட்டு மல்லாமல் பேருந்திலும் நின்றபடியே பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டோம். அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பரவும் என்று அரசு தரப்பில் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் இணைய தளங்களில் தெரிவித்து வரு கின்றனர். அப்படியிருக்க அரசே பேருந்து களில் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு பயணம் செய்யக்கூடிய சூழ்நி லையை உருவாக்கியது வேதனை யளிக்கிறது. அதுவும் திடீரென பேருந்து களை குறைத்து ஒவ்வொரு தனி மனித னையும் அரசு போக்குவரத்துக் கழகம் சிரமத்துக்குள்ளாக்கி விட்டது. இந்த சூழ்நிலையில்தான் அதிக எண்ணிக்கை யிலான பேருந்துகளை இயக்கிருக்க வேண்டும். ஆனால் அரசு அதனை செய்யத் தவறி விட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். திங்கட்கிழமை முதல்வர் செவ் வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தவுடன், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்ட மிட்டு கோயம்பேடு பேருந்து நிலை யத்திற்கு திங்கட்கிழமை மாலை முதலே குவியத் தொடங்கினர். அங்கும் போது மான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தன. இயக்கப்பட்ட ஒருசில பேருந்துகளிலும் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தனர்.