திருவள்ளூர், ஆக. 28- திருத்தணி வட்டா ரத்திற்கு உட்பட பழங்குடி யினர் மக்களுக்கு குடி மனைபட்டா, சாதிசான்றிதழ், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (ஆக.28) திருத்தணி ஆர்.டி.ஓ அலுவல கம் அருகில் பட்டினி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் செவ்வாயன்று மழைவாழ் மக்கள் சங்க தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தினர். அப்போது, டி.புதுரை சேர்ந்த 9 குடும்பங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், தாடூர், எல்.என். கண்டிகை, டி. புதூர், சின்னகடம்பூர், பெரிய கடம்பூர், அவூர், சிறுதுளி, வி.கே.என்.கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள 174- குடும்பங்களுக்கு மாற்று இடத்திற்கான ஒப்புதல் ஆணை நகல் வழங்கப்ப ட்டது. மேலும் எல்.என். கண்டிகை, தாழவேடு, காஞ்சிபாடி, செருக்க னூர்பங்களாமேடு, சிறுகுமி ஆகிய கிராமங்களில் 117 குடும்பங்களுக்கு குடிமனை பட்டாவுக்கான ஒப்புதல் நகல் வழங்கப்பட்டது. மேலும், அடுத்த 10 நாட்க ளில் எல்லா கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த தால் பட்டினி போராட்டம் கைவிடப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை யில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, செயலாளர் ஆர்.தமிழரசு மாவட்டப் பொருளாளர் எஸ்.குமரவேல், ஒன்றியத் தலைவர் மணிகண்டன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.அந்தோணி வட்டக்குழு உறுப்பினர் பாலாஜி, வழக்கறிஞர் ரீசர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.