tamilnadu

சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை, மே 21-வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதன் மற்றும் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் சூறைக் காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள் ளது. பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்றும், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்கவும், பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.