tamilnadu

img

சென்னை ஐஐடியில் 200ஐ நெருங்கிய கொரோனா தொற்று  

சென்னை ஐஐடியில் இன்ற பரிசோதனை செய்ததில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 196ஆக உயர்ந்துள்ளது.

சென்னை ஐஐடியில் கடந்த வாரம் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மேலும் ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவ, மாணவியர், பேராசிரியர், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 196 அக உயர்ந்துள்ளது.  

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.