திருவள்ளூர், ஏப். 2- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த சிறுவாக்கம் ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் ஊராட்சி மூலம் வழங்கும் குடிநீர் உப்பு நீராக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணறு, பூமிக்கடியில் சிதைவு ஏற்பட்டு, தண்ணீரில் சேர் கலந்துள்ளது.இந்த தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்த முடியாததால் நான்கு மாதங்களாக குடிநீரின்றி இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். 3 கி.மீக்கு அப்பால் உள்ள ஆமூருக்கு சென்று அங்குள்ள விவசாய பம்புசெட்டுகளில் தண்ணீர்பிடித்து பயன்படுத்துகிறார்கள். குடிநீர் பிரச்சனையை போக்க வேண்டும் என பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினர் அதிமுகவைச் சேர்ந்த சிறுனியம் பலராமனிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை இல்லை. மேலும்,அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.இது குறித்து சிறுவாக்கம் ஊராட்சி மன்றம் முன்னாள் தலைவர் ராதிகாசேகர் கூறுகையில், ‘புதியதாக ஒருஆழ்துளை கிணறு அமைத்துஉள்ளனர். அந்த புதிய ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஊராட்சிசெயலரை கேட்டால், அவர்மின் இணைப்பு கொடுக்கஒயர் வாங்கக் கூடஊராட்சியில் நிதியில்லைஎன்கிறார்கள். மக்கள்பணியாற்ற முடியாமல் சிறுவாக்கம் ஊராட்சி செயலிழந்து காணப்படுகிறது’ என்றார்.இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்தில் சென்றுள்ளதால் கடல் நீர்உட்புகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க எந்த தடுப்பணைகட்டவும், ஏரி,குளங்களை பராமரிக்கவும் அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.