tamilnadu

img

விபத்தில் நசுங்கிய பெண்ணின் கை அறுவைசிகிச்சையால் பாதுகாக்கப்பட்டது

சென்னை, ஆக. 29- காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொன்னியம்மாள் என்ற இளம் பெண்ணிற்கு சாலை விபத்தில் வலது கை நசுங்கியதால் கடுமையான காயம் ஏற்பட்டது.   காயத்தின் காரணமாக, மணிக்கட்டு தொங்கும் மோச மான நிலை ஏற்பட்டது.  இந்த இளம் நோயாளிக்கு சிக்க லான பல அறுவைசிகிச்சை களை உள்ளடக்கிய தனித்து வமான சிகிச்சையை வெற்றி கரமாக செய்துமுடித்திரு ப்பதாக சென்னையைச் சேர்ந்த பார்வதி மருத்துவ மனை  அறிவித்துள்ளது.  எலும்பு முறிவியல் அறுவை சிகிச்சைத் துறையின் இயக்கு னர் டாக்டர் தர்மராஜன், எலும்பு முறிவியல் துறையின் முதுநிலை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் மிதுன், மற்றும் மருத்துவமனையின் முதுநிலை பிளாஸ்டிக் அறுவைசிகிச்சைத் துறை யின் மருத்துவர் டாக்டர் அருள் ஆகியோர் தலைமையிலான  அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு, சவால்கள் நிறைந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. இதனால் மேற்புற கை வெட்டப்படுவதை வெற்றி கரமாக தவிர்த்திருப்பதோடு, நோயாளியின் கை இயக்கத்திறனை அவர் மீண்டும் பெறுவதற்கு இந்த அறுவைசிகிச்சை உதவியுள்ளது. இந்த இளம் பெண் நோயாளி, தனது பாதிப்பி லிருந்து மீண்டது குறித்து பேசுகையில், “பிற மருத்துவ மனையில் எனது கையை வெட்டி எடுத்தாக வேண்டும் என்று யோசனை தெரிவிக்க ப்பட்ட நிலையில், பார்வதி மருத்துவமனை  மருத்து வர்கள் நசுங்கிய எனது கைக்குமறுவாழ்வு அளித்துள்ளனர் என்றார்.