tamilnadu

img

சென்னையில் இருந்து இன்று முதல் கட்டமாக 200 பேருந்துகள் இயக்கம்..

சென்னை:
சென்னையில் இருந்து திங்கட்கிழமை (ஜூன்28)  முதல்  27 மாவட்டங்களுக்கு முதல் கட்டமாக 200 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.அரசு பேருந்து  போக்குவரத்து சேவை தொடங்குவதால் 27 மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் நாளை முதல் எளிதாக சென்று வர வழிவகை செய் யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல் படுத்தப்பட்டு இருந்த முழு ஊரடங்கு படிப் படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.இதற்காக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப் பட்டுள்ளன. முதல் வகை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் உள்ளன.

மேற்கண்ட 11 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் தளர்வுகள் குறைந்த அளவில் குறைக் கப்பட்டன. 23 மாவட்டங்கள் 2-வது வகையில் உள்ளன. அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பூர், தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத் துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் இந்த வகை பிரிவில் உள்ளன.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் 3-வது வகை பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்த 27 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருப்பதால் 90 சதவீத தளர்வுகள் அமலில் உள்ளன. இந்த 27  மாவட்டங்களிலும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி உள்ளது.கடந்த 20-ந்தேதி 5-வது கட்ட தளர்வுகள் அறிவிக்கபட்டபோது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வெள்ளி யன்று 6-வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப் பட்ட போது 2-வது வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும் 28-ந்தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.

அரசு பேருந்துகள்
அதன்படி 27 மாவட்டங்களில் திங்கட் கிழமை முதல் முழு அளவில் அரசு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல போக்குவரத்து சேவை இருக் கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அரசு பேருந்து போக்குவரத்து சேவை தொடங்குவதால் 27 மாவட்டங்களுக்கு இடையே பொதுமக்கள் எளிதாக சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழில் நிமித்தமாகவும், தனிப்பட்ட முறையில் குடும்ப நிகழ்ச்சிகளுக்காகவும் பொதுமக்கள் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.

27 மாவட்டங்களில் இருந்தும் முக்கிய நகரங்களுக்கு பஸ் சேவையை  காலை 6 மணி முதலேயே தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையில் இருந்து ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், செங் கல்பட்டு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நடந்து வருகிறது. அதிக கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.ஒவ்வொரு பேருந்திலும் 50 சதவீத பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முக கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.