tamilnadu

இ-சேவை மைய ஊழியர்கள் மே 31 ஆம் தேதி போராட்டம்

சென்னை,மே 19-கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதார் இசேவை மைய ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்த விவரம் வருமாறு:கடந்த 17-05-2019 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இ சேவை மையங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் அலட்சியமாக வேலைசெய்தால் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று நிர்வாக இயக்குனர் எச்சரித்துள்ளார். இ-சேவை மற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளார்கள். ஆனால் அரசும்நிர்வாகமும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை, இ-சேவை மையம் செயல்படுவதற்கான அடிப்படை சாதனங்களும் வழங்கப்படவில்லை. இப்படிஅரசே மக்களுக்கான சேவைக்கு குறுக்கே நிற்கிறது.கடந்த 7 மாதங்களாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் சொல்லப்படாத சம்பளபிடித்தம் செய்யப்படுகிறது. வழங்கப்படவேண்டிய ரூ. 8ஆயிரத்தில் ரூ.5 ஆயிரம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. இதை எதிர்த்த வழக்கு துணை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் உள்ளது. பலமுறை கேட்டும் இதுவரை இஎஸ்ஐ கார்டு வழங்காத காரணத்தினால், மருத்துவ பலன்களை பெறமுடியவில்லை.பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகபேப்பர், டோனர் உள்ளிட்ட உபகரணங்களை கடந்த 10 மாதங்களாக நிர்வாகம் சரியாக வழங்குவதில்லை. பிஎஸ்என்எல் கட்டணம் காட்டாத காரணத்தால் இன்டர்நெட் வேலை செய்யாமல் போகிறது. இதனால் சர்வர் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதால் அடிக்கடி சேவை துண்டிக்கப்படுகிறது. சேவை மையங்களில் குடிநீர், கழிவறை போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அலுவலகத்தில்  பெண்களுக்கு  பாலியல் தொல்லை  தருபவர்கள் மீது மேல் அதிகாரியிடம் புகார் கூறியும் எந்தநடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள். தனியார் மையத்திற்கு இ-சேவை அங்கீகாரம் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கப்படுகிறது. இத்தனியார் மையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குமேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.நிர்வாகத்தின் மேற்கண்ட போக்குகளை கண்டித்து வரும் மே 31ஆம் தேதி தகவல் தொழில்நுட்ப மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் இ சேவைமற்றும் ஆதார் சேவை மைய ஊழியர்கள்தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவுள்ளனர்.