tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் தொடர் முழக்கப் போராட்டம்

வேலூர், ஜூலை 4- தமிழக அரசாணைப்படி மாற்றுத்திற னாளிகளுக்கான குறைதீர் கூட்டங்களை முறையாக நடத்தக்கோரி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்  தின் சார்பில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்  அலுவலகம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் மாவட்டத் தலைவர் கே.கோவிந்த ராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி. மணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் தா.வெங்கடேசன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.சங்கரி,  மாவட்டச் செயலாளர் கோபால ராஜேந்திரன்  ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நூறு நாள் வேலையில் மாற்றுத்தினாளி களுக்காக பிறப்பிக்கப்பட்ட சட்டங்களை செயல்படுத்த வேண்டும், தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் முழு சலுகைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.