சென்னையில் மக்களவைத் தேர்தலில் ஆர்வமுடன் வாக்களித்த முதல் தலைமுறை வாக்காளர்கள்.
.........................
திருவொற்றியூர் பகுதி 1ஆவது வட்டத்திற்கு உட்பட்ட நெட்டுகுப்பம் (பாகம் 69) சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்கு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. இதனால் ஓட்டுப் போட முடியாமல் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
.........................
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
.........................
சென்னை தி.நகர் சிஐடி நகரில் உள்ள தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில் 107 வயது மூதாட்டி ஒருவர் வாக்களித்தார்.