சென்னை:
நீட் தேர்வுக்கு எதிரானபோராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் மீது சென்னை காவல் துறையால் புனையப்பட்ட மற்றொரு வழக்கில் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
2017 செப்டம்பர் 6ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக வும், அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நடைபெற்ற போராட்டத் தில் 27 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதில் மாணவிகளை இரவு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருப்ப தைக் கண்டித்து, வழக்கறிஞர் திருமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். சித்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கறிஞர் திருமூர்த்தி, நிருபன், ஜான்சி, மாணிக்கம், பூபதி உள்ளிட்ட மாணவர்கள் மீது வழக்குத் தொடுத்தனர்
இந்த வழக்கு எழும்பூர் 14ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கைத் தள்ளு படி செய்யக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் திருமூர்த்தி, ‘வழக்கு ரத்து மனு’ தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இளந்திரையன் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.