கடலூர், ஆக. 5- கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டிய தலித் இளை ஞர் மீது பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நத்திய சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. விருத்தாச்சலம் வட்டம் மு.பட்டிகுடி காடு கிராமத்தில் கூலிங் கிளாஸ் கண்ணாடி அணிந்து வண்டி ஓட்டிச் சென்ற தலித் இளைஞன் அழகேசனை பிற்ப டுத்தப்பட்ட இளைஞர்கள் தாக்கியும், சாதிப் பெயரைச் சொல்லியும் திட்டி யுள்ளனர். அழகேசனின் அப்பா, அம்மா உறவினர்களையும் ஊருக்குள் புகுந்து அடித்து தாக்கியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் கள் விருத்தாசலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அழகேசன், அவரின் தாயார் அன்னக் கிளி, சத்தியமூர்த்தி, சுப்பிரமணியன் ஆகியோரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வி.சுப்புராயன், மாவட்டத் தலைவர் பி. வாஞ்சிநாதன், மாவட்ட துணைத் தலை வர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா ளர் என்.எஸ்.அசோகன், வட்டக் குழு உறுப்பினர் சிவஞானம், வாலிபர் சங் கத்தின் மாவட்டப் பொருளாளர் கலைச் செல்வன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டச் செயலாளர் செல்வக்குமார் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி நடந்த சம்பவங்களை கேட்டரிந்தனர். இந்த சம்பவத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னனி கடும் கண்டனத்தை தெரி விப்பதுடன், சம்வத்திற்கு காரணமான வர்கள் மீது உரிய வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெய் ஸ்ரீ ராம் பெயரால் வட மாநிலத்தில் நடைபெறும் வன்முறை, உயிர் பறிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழகத்தில் நடைபெறும் ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாகய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பண்ருட்டியில் தலைவர் மகா லட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் மேரி, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் கிருஷ்ணன், வாலிபர் சங்க முன்னாள் நகரச் செயலாளர் தினேஷ் ஆகியோர் பேசினர்.