சென்னை, ஜூலை 14 - மயிலாடுதுறை அருகே மாற்றுத்திற னாளி இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கும்பல் பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர உரிய நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்ஸி ராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடு துறை தாலுகா, அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திற னாளி இளம்பெண் ஜூலை 7 அன்று இரவு, சமூகவிரோதிகள் சிலரால் மயக்க மருந்து கொடுத்து கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, மாற்றுத்திறனாளிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அடங்கிய குழு நேரில் விசாரித்த தில் 4 சமூக விரோதிகள் ஜூலை 7 இரவு முழுவதும் தன்னை வல்லுறவு செய்ததாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் தெரிவிக்கிறார். போதிய படிப்பறிவு இல்லாத மற்றும் புகார் அளிக்க விபரம் தெரியாத பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளி தரப்பில் மயிலாடு துறை அனைத்து மகளிர் காவல்நிலையத் தினரே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வகையில் உரிய சம்பவங் களை குறிப்பிடாமல், புகார் எழுதிப் பெற்று, ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையும் பதிந்துள்ளதாக தெரிய வருகிறது. ஆனால், அலெக்சாண்டர் (எ) சுந்தரம் என்ற குற்றவாளி மட்டும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக புகார் பெற்று, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு 376 சேர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், காவல்துறை மற்ற குற்றவாளிகள் பெயர்களையும் எழுதி வாங்காதது என்பது அவர்களை தப்பிக்க வைக்கவே பயனளிக்கும். எனவே, நடந்துள்ள குற்றம் குறித்து மாதர் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணிடம் உரிய புகாரினை பெற்று மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 92(d) உள்ளிட்ட உரிய பிரிவு களில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். உரிய மருத்துவ நிபுணர்களைக்கொண்டு சம்பந்தப்பட்ட அனைவரையும் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி தடயங்களை சேகரிக்க வேண்டும். குற்றத்தை உறுதிப்படுத்தி, குற்றவாளி களுக்கு கடும் தண்டனை விரைவில் கிடைத்திட வேண்டும். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட வும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க முதலமைச்சரை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.