tamilnadu

அமைச்சருக்கு அறநிலையத்துறை ஊழியர்கள் நன்றி

சென்னை, மார்ச் 24 - அறநிலையத்துறையில் உள்ள 2 ஆயிரம்  தினக்கூலி பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சரை சேவூர் எஸ்.ராமச்சந்திரனை கடந்த 17ந் தேதி தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் நிர்வாகிகள் சந்தித்து, அற நிலையத்துறையில் பணியாற்றும் தற்காலிக  பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்  என்று கோரிக்கை வைத்தனர். இது குறித்து  பரிசீலிப்பதாக அமைச்சர் உறுதி அளித்தி ருந்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் செவ்வாயன்று (மார்ச் 24) விதி 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறையில் 31.7.2019  வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து,  பணி நிறைவு செய்த சுமார் 2 ஆயிரம் தினக்கூலி  மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை தகுதி யின் அடிப்படையிலும், காலிப் பணி யிடங்களை கணக்கில் கொண்டும் கால முறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றார். மேலும், திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிரந்தரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் துறை நிலையிலான ஓய்வூதி யம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபா யாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறி வித்தார். இதையடுத்து  தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் காப்பாளர் எ.தேவ ராசன், மாநில பொதுச் செயாளர் அ.முத்து சாமி, கவுரவத் தலைவர் சிவஸ்ரீ.எஸ்.ராஜூ  குருக்கள், மாநில துணைத்தலைவர் சு.தன சேகர் உள்ளிட்டோர்  அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரனை நேரில்  சந்தித்து முதலமைச்ச ரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தனர்.