tamilnadu

img

கோவில் நிலங்களை நியாயமான விலையில் வழங்கக் கோரிக்கை

செங்கல்பட்டு, செப்.17-  கோவில் இடங்களில் குடியிருப்போருக்கும், சாகுபடி செய்யும் விவசாயிக ளுக்கும், சிறு வணிகம் செய்வோருக்கும் அந்த இடங்களை நியாயமான விலையை தீர்மானித்து கிரயத் தொகையை தவணை முறையில் பெற்றுக் கொண்டு அவர்களுக்குச் அந்த இடங்களை சொந்த மாக்க வேண்டும் என வலியுறுத்தி  தமிழ்நாடு அனைத்து சமய நிறுவனங்க ளில் குடியிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து சமய அற நிலையத்துறைக்குச் சொந்த மான இடங்களில் குடி யிருப்போருக்கு சாகுபடி செய்வோருக்கும் வாடகை, குத்தகையை  பல மடங்கு உயர்த்தியதை  உடனடியாக  ரத்து செய்ய வேண்டும், 100 முதல் 500 மடங்கு வரை வாடகையை உயர்த்தியும், கடன் சுமையை ஏற்றி யும் வாடகை செலுத்தாத வர்களை ஆக்கிர மிப்பாளர்கள் எனக் கூறி கடைக்கு சீல் வைத்து ஏலம் விடும் நடவடிக்கை கைவிட வேண்டும்,  இந்து சமய அறநிலையத் துறையின் கீழ்  உள்ள கோயில் மற்றும் சொத்துக்களை ஆதிக்க சக்தி கள் கையில் ஒப்படைக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும், சிங்கப்பெருமாள் கோயில் ஜே.ஜே நகரில் வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத்தப்பட்டன. செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் செவ்வா யன்று (செப். 17) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு  மாவட்ட அமைப்பாளர் லிங்கநாதன் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.மோகன், மாவட்டச் செயலாளர் கே.நேரு,  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், மாவட்டச் செயலாளர் பி.சண்முகம் உட்படபலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு  அனைத்து சமய  நிறுவன நிலங்களில்  குடியிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு  கூட்ட மைப்பின் மாநில நிர்வாகி செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.