சென்னை, ஜூன் 28- மைக்ரோ திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான களப்பணியின் மூலம் விரைவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். பெருங்குடி மண்டலம், மடிப்பாக்கத்தில் அதிகாரிகளோடு மைக்ரோ திட்டம் குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் மைக்ரோ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்து வரை நியமித்து உள்ளோம், அறிகுறி இருப்ப வர்களை சோதனை செய்து மருத்துவ மனைக்கு அழைத்து செல்வது, அறிகுறி இல்லாதவர்களை தனிமைபடுத்துவது போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றது. மடிப்பாக்கம் பகுதியில் 31 சிறப்பு தன்னார்வலர்கள் (போக்கஸ் வாலன்டியர்ஸ்) பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தனி மைப்படுத்தப்பட்ட இல்லங்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தேவையான உதவி களை செய்வார்கள்.
மைக்ரோ திட்டம் தொற்று அதிகளவில் பரவுவதையும், உயிரி ழப்புகள் குறைவதையும் உறுதி செய்கிறது. சென்னையில் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர். பெரிய அளவில் தனிமைபடுத்தும் முறையை தற்போது பின்பற்றி வருகிறோம். தற்போது தினசரி பரிசோதனையின் அளவை 10 ஆயிர மாக உயர்த்தி வருகிறோம். தொற்று குண மடைந்து வீடு திரும்பிய எவருக்கும் இதுவரை மீண்டும் தொற்று ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை கொரோனா பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என ஆசிரியர் சங்கம் வைத்துள்ள கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மாநக ராட்சி பள்ளிகளில் 3500 ஆசிரியர்கள் பணி யாற்றுகின்றனர். அதில் 1000 பேர் மட்டுமே தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆரோக்கி யமாக இருப்பவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர், தொலைபேசி மூலமாக பாதிக் கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் அலுவல் பணியிலும், சிறப்பு தன்னார்வலர்கள் கண்காணிக்கவுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை ஆசிரியர்களே முன்வந்து சேவை மனப் பான்மையுடன், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.