சென்னை:
மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக லண்டன் விமான நிலையத்தில் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அதிர்ச்சியடைந்து லண்டன் விமான நிலையத்திலிருந்து மாற்று வழியில் வெளியே சென்றார்.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாள்கள் பயணமாக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமி புதன்கிழமையன்று சென்னையில் இருந்து
ஏமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்றார். இதன்பின் அங்கிருந்து அவர் லண்டன் சென்றார். இந்தப் பயணத்தில் முதல்வருடன் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார் உள்ளிட்டோர் செல்கின்றனர்.இந்நிலையில் லண்டன் சென்ற முதல்வருக்கு லண்டன் வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஆனால், முதல்வர்வந்த அதே நேரத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்குள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களும் மாற்று வழியில் வெளியே சென்றதாக கூறப்படுகிறது.