சென்னை,மார்ச்.27- வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்க்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வானிலை முன்னறிவிப்பில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்மொழி கொள்கை விவகாரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும்போது தமிழ் பேசும் மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பில் தேவையில்லாமல் இந்தியைத் திணித்துள்ளது கடும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது