தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஏற்கனவே 2 முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தொழில்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதித்துறை அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.