tamilnadu

img

சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்

சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், சிமெண்ட் விலையை மேலும் ரூ. 20 குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது நடைமுறையிலுள்ள சிமெண்டின் விலையானது மார்ச் மாத விலையான ரூபாய் 420-ஐ ஒப்பிடுகையில் சற்று உயர்ந்து தற்சமயம் 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த உயர்வானது 4.7 சதவீதமே ஆகும். எனவே, சிமெண்டின் இந்த விலையேற்றம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது. தற்போது ஏற்பட்டுள்ள 20 ரூபாய் விலையேற்றத்தை மேலும் குறைக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் (டான்செம்) சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனையை உயர்த்தி மக்களுக்குக் குறைந்த விலையில் சிமெண்ட் விநியோகம் செய்ய இந்த அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை 3,67,677 மெ.டன் டான்செம் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இது மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை இரு மடங்குக்கும் மேலாக 7,68,233 மெ.டன் என உயர்ந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சிமெண்ட மூட்டை விலை தற்போது ரூ. 420 ல் இருந்து ரூ.440 வரைக்கும் விற்கப்படும் வருகிறது. டான்செம் சிமெண்ட் ரூ.350 முதல் ரூ.360 வரை விற்கப்பட்டு வருகிறது. தனியார்  சிமெண்ட் விலையை ஒப்பிடுகையில் ரூ.90 குறைந்த விலையில் விற்கப்படுகிறது. 

குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் வலிமை சிமெண்ட் மாதம் ஒன்றுக்கு 30,000 மெ.டன் விற்கப்பட உள்ளது என குறிப்பிட்டார். முன்னதாக மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் சிமெண்ட் விலை உயர வாய்ப்புள்ளதாகத் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.