சென்னை,நவம்பர்.25- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
டிசம்பர் 9இல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூடும்,பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தி முடுவு எடுக்கப்படும்.
சட்டப் பேரவை கூட்டத்தை முழுவதுமாக நேரலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எனவும் சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.